ஏலக் குத்தகைகளைச் சட்டவிரோத முறையில் கையாண்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை

1 mins read
9956dd6d-efe5-4f4d-bdb6-717535034c71
கோப்புப்படம்: எஸ்டி -

ஜூரோங் பறவைப் பூங்கா, நைட் சஃபாரி, சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம், ரிவர் சஃபாரி ஆகிய இடங்களில் சிவில் மற்றும் மின்சாரப் பணிகள் மேற்கொள்வதற்காக சமர்ப்பித்த ஏலக் குத்தகைகளைச் சட்டவிரோதமான முறையில் கையாண்ட மூன்று நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் வனவிலங்கு காப்பகத்துக்குச் சமர்ப்பித்த ஏலக் குத்தகைகள் தொடர்பில் மூன்று நிறுவனங்கள், 2015ஆம் ஆண்டின் ஜூலை மாதத்திற்கும் 2016ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் தகவல்கள் பரிமாறிக்கொண்டதுடன் ஒன்றோடு ஒன்று சரிபார்த்துக்கொண்டு தங்களின் ஏலத் தொகையை நிர்ணயித்துக்கொண்டதாகப் புகார் கூறுகிறது.

போட்டித்தன்மை வாய்ந்த தனிப்பட்ட ஏலக்குத்தகைகள் செய்யப் படுவதாக ஒரு தவறான எண்ணத்தை உண்டாக்கினாலும் உண்மையில் அவ்வாறு இல்லை என்பதை சிங்கப்பூர் வணிகப் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் கண்டறிந்தது.