'டிஓசி' அவதூறு வழக்கு: ரவியின் வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது

'டிஓசி' அவதூறு வழக்கு: ரவியின் வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது

1 mins read
2fcb8918-fec6-4d4a-b3f0-2eded24f0fa8
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அரசியலமைப்புச் சட்டத்தைச் சுட்டிய வழக்கறிஞர் ரவி, தன் கட்சிக்காரர் அவ்வாறு சரிசமமாக நடத்தப்படவில்லை என்று எழுப்பிய வாதத்தை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.  படம்: எஸ்டி/ஜேசன் குவா -

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அரசியலமைப்புச் சட்டத்தைச் சுட்டிய வழக்கறிஞர் ரவி, தன் கட்சிக்காரர் அவ்வாறு சரிசமமாக நடத்தப்படவில்லை என்று எழுப்பிய வாதத்தை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களை அவதூறு செய்யும் வகையில் 'தி ஆன்லைன் சிட்டிசன்' எனும் சமூக அரசியல் இணையத்தளத்தில் டேனியல் டி கோஸ்டா, 36, வெளியிட்ட ஒரு கட்டுரை அமைந்ததாக அவர் மீது சென்ற ஆண்டு குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அவரைவிட மோசமாக அவதூறு செய்தோர் குற்றம் சாட்டப்படாத நிலையில் டி கோஸ்டா மட்டும் ஏன் குற்றம் சாட்டப்பட்டுள்ளார் என்று திரு ரவி சமர்ப்பித்த மனு நிராகரிக்கப்பட்டது.