உலகப் பட்டியலில் சிங்கப்பூர் நிறுவனங்கள்

நீடித்து தாக்குப்பிடிக்கக்கூடிய உலகின் 100 பெரிய நிறுவனங்களின் பட்டியலில் சிங்கப்பூரின் மூன்று நிறுவனங்கள் இணைந்து உள்ளன. சொத்து மேம்பாட்டாளரான சிட்டி டெவலப்மெண்ட்ஸ் (சிடிஎல்), கேப்பிட்டலேண்ட் ஆகிய இரண்டும் முறையே 36வது மற்றும் 63வது இடங்களைப் பிடித்துள்ளன. இவ்விரண்டும் கடந்த ஆண்டின் பட்டியலில் முறையே 25வது, 33வது இடங்களில் இருந்தன. 

மேலும், கடந்த ஆண்டில் இப்பட்டியலில் இடம்பெறத் தவறிய தொலைத்தொடர்பு நிறுவனமான சிங்டெல் இவ்வாண்டில் 95வது இடத்தைப் பிடித்து பட்டியலுக்குள் வந்துள்ளது. 2018ஆம் ஆண்டில் சிங்டெல் 63வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், 100 நிறுவனங்களைக் கொண்ட பட்டியலில் சிங்கப்பூர் சார்பாகக் கடந்த ஆண்டு இரு நிறுவனங்கள் மட்டுமே இடம்பிடித்த நிலையில் இவ்வாண்டு அது மூன்றாகி உள்ளது.

Loading...
Load next