அடுப்பிலிருந்த சூடான பாத்திரத்துக்குள் குழந்தையின் கையை வைத்த பணிப்பெண் கைது

தமது பராமரிப்பில் இருந்த 16 மாதக் குழந்தையின் கையை அடுப்பில் இருந்த சூடான பாத்திரத்துக்குள் வைத்து கடுமையான காயம் விளைவித்ததற்காக 30 வயது பணிப்பெண்ணை போலிசார் கைது செய்துள்ளனர்.

புவாங்காக் லிங்கின் புளோக் 992Bல் உள்ள முதலாளியின் வீட்டில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தின் தொடர்பில் இம்மாதம் 15ஆம் தேதி அந்தப் பணிப்பெண் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் அதற்கு முந்தைய நாள் நிகழ்ந்ததாகச் சொல்லப்பட்டது.

வீட்டில் நிறுவப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான 46 வினாடிகளுக்கான காணொளியை, குழந்தையின் தாயான 40 வயது திருவாட்டி ஏமி லோ ஃபேஸ்புக்கில் நேற்று (ஜனவரி 21) பதிவேற்றியதையடுத்து இந்தச் சம்பவம் பற்றிய தகவல்கள் வெளியாகின.

குழந்தையின் இடது கையை அடுப்பில் வைக்கப்பட்டிருந்த சூடான பானை ஒன்றுக்குள் வைத்து எடுப்பதும் அதை மீண்டும் மீண்டும் செய்வதும் காணொளியில் பதிவாகியிருந்தன. குழந்தை அழுவதைக் காணொளியில் கேட்க முடிந்தது.

இதுவரை 218,000க்கும் அதிகமான தடவைகள் அந்தக் காணொளி பார்க்கப்பட்டுள்ளது. செய்திக்குப் பிறகு அந்தக் காணொளி இணைக்கப்பட்டுள்ளது.

திருவாட்டி ஏமி லோவுக்கு 8 வயதில் மற்றொரு மகள் இருக்கிறார்.

அந்தக் காணொளிப் பதிவைப் பார்த்தபோது எனது அங்கம் முழுவதும் அதிர்ந்தது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார் திருவாட்டி ஏமி லோ.

“அந்தச் சம்பவத்துக்குப் பிறகு ஒவ்வோர் இரவும் என் குழந்தை அழுதுகொண்டே இருக்கிறது. குழந்தை அச்சப்படுகிறதா அல்லது இன்னும் வலி இருக்கிறதா என்பது தெரியவில்லை,” என்று கணக்காளராகப் பணிபுரியும் திருவாட்டி லோ குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட பணிப்பெண் மியன்மார் நாட்டைச் சேர்ந்தவர் என்றும் கடந்த மாதம் ஏழாம் தேதிதான் அவர் பணியில் சேர்ந்தார் என்றும் தெரிவித்தார் திருவாட்டி லோ.

சூடான பொருள் இருந்த சட்டியை குழந்தை தவறுதலாக குழந்தை தொட்டுவிட்டது என்று முதலில் கூறிய பணிப்பெண், இவ்வாறு செய்தால் சொந்த ஊருக்குத் திரும்பிவிட முடியும் என்று எண்ணி இந்தச் செயலில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டதை திருவாட்டி லோ தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

கண்காணிப்பு கேமராவில் பதிவான காணொளியைப் பார்த்த பிறகு போலிசாருக்கு தகவல் தெரிவித்தார் திருவாட்டி லோ.

வேண்டுமென்றே அபாயகரமான வழிகளில் காயம் விளைவித்ததாக வகைப்படுத்தி இந்தச் சம்பவத்தின் தொடர்பில் போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

#தமிழ்முரசு #பணிப்பெண்கைது #குழந்தையின்கையில்சூடு #மியன்மார்பணிப்பெண்

SPH Brightcove Video
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!