விபத்தில் இளம்பெண் காயம்

1 mins read
6ddc3c3f-f7c6-4d10-9022-5b99695d0478
நீல வண்ண காருக்கு முன்பு மோட்டார் சைக்கிள் பக்கவாட்டில் கிடப்பதை ஸ்டோம்ப் வாசகர் அனுப்பிய புகைப்படத்தில் காண முடிந்தது. -

டெக் வை அவென்யூவுக்கும் ஜாலான் டெக் வைக்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றுக்கிடையே நேற்று (ஜனவரி 21) இரவு விபத்து நிகழ்ந்தது.

சம்பவம் குறித்து இரவு 9.21 மணிக்குத் தகவல் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர்.

அதில் காயமடைந்த மோட்டார் சைக்கிளோட்டியான 23 வயது பெண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுய நினைவுடன் இருந்ததாக போலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

நீல வண்ண காருக்கு முன்பு மோட்டார் சைக்கிள் பக்கவாட்டில் கிடப்பதை ஸ்டோம்ப் வாசகர் அனுப்பிய புகைப்படத்தில் காண முடிந்தது.

#தமிழ்முரசு #விபத்து #இளம்பெண்காயம்

குறிப்புச் சொற்கள்
விபத்துகாயம்