மைக்ரோசாஃப்ட்டின் சத்யா நாதெள்ளாவுடன் பிரதமர் லீ

மைக்ரோசாஃப்ட்டின் சத்யா நாதெள்ளாவுடன் பிரதமர் லீ

1 mins read
690319ab-6179-4f0f-ae60-7ecb964e1f0d
படம்: தொடர்பு, தகவல் அமைச்சு -

டாவோஸ்: சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளியல் கருத்தரங்கில் கலந்துகொள்ளும் பிரதமர் லீ சியன் லூங், அங்கு பல அரசியல், வர்த்தகத் தலைவர்களைச் சந்தித்து வருகிறார்.

அவர்களில் ஒருவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெள்ளா. ஹாங் காங் தலைமை நிர்வாகி கேரி லாம்மையும் பிரதமர் லீ நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். சிங்கப்பூருக்கும் ஹாங்காங்கிற்கும் இடையிலான நல்லுறவை இருவரும் மறுஉறுதி செய்தனர்.

வட்டார, அனைத்துலக மேம்பாடுகள் பற்றி இருவரும் தங்கள் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெள்ளாவுடன் பிரதமர் லீ சியன் லூங்.

படம்: தொடர்பு, தகவல் அமைச்சு