தமது தொகுதியில் வைக்கப்பட்ட சீனப் புத்தாண்டு பதாகையில் தமது படம் மாற்றியமைக்கப்பட்டது குறித்து மெக்பர்சன் தனித் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டின் பெய் லிங் போலிசில் புகார் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றியமைக்கப்பட்ட படம் சமூக ஊடகத்தில் வலம் வந்தது.
அதில் திருவாட்டி டான் பெய் லிங் அரைகுறை ஆடையுடன் இருப்பது போல காட்டப்பட்டது.
சீனப் புத்தாண்டு வாழ்த்துக்குப் பதிலாக அரசாங்கத்தின் யு சேவ் கழிவுகளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள் என்றும் செல்வ செழிப்புமிக்க, சக்திவாய்ந்த வாழ்க்கையைப் பெற மக்கள் செயல் கட்சிக்கு வாக்களியுங்கள் என்றும் பதாகையில் வாசகங்கள் இருப்பது போல மாற்றியமைக்கப்பட்ட படத்தில் காட்டப்பட்டது.
மாற்றியமைக்கப்பட்ட படம் சமூக ஊடகத்தில் வலம் வந்ததை அடுத்து, உண்மையான பதாகையின் படத்தை திருவாட்டி டின் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று முன்தினம் மாலை பதிவேற்றம் செய்தார்.

