சுடச் சுடச் செய்திகள்

இந்திய குடியரசு தினக் கொண்டாட்டத்தில் அமைச்சர் ஓங்

சிங்கப்பூரில் நேற்று இரவு நடைபெற்ற இந்தியாவின் 71வது குடியரசு தினக் கொண்டாட்ட விருந்தில் கல்வி அமைச்சர் ஓங் யி காங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
விருந்தில் கலந்துகொண்ட சுமார் 1,200 பேரை வரவேற்றுப் பேசிய சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் திரு ஜாவத் அஷ்ரஃப், “இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் இந்தியாவின் மையக் கவனம் ஆசியானின் மீது இருக்கும். அதில் சிங்கப்பூர்,

இந்தியாவின் மிக முக்கிய பங்காளியாகத் தொடர்ந்து திகழும்,” என்றார்.
பின்னர் பேசிய கல்வி அமைச்சர் ஓங், “இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவ தற்கு சில அம்சங்கள் உண்டு. சிங்கப்பூரிடம் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டமும் இந்தியாவிடம் ஸ்கில் இந்தியா திட்டமும் இருக்கின்றன. இரண்டு

நீண்டகால தேசிய திட்டங்கள்.
இவற்றின் மூலம் இரு நாட்டு மக்கள் மாறவிவரும் பொருளியலுக்கு ஏற்ப தங்களை மேம்படுத்திக்கொள்ளலாம்,” என்று கூறி, இந்தியாவுக்கு சிங்கப்பூர் சார்பில் குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon