பற்றாக்குறையால் முகக்கவசங்களை வாங்கி அனுப்பும் சீன நாட்டவர் 

இங்கு வசிக்கும் சீன நாட்டவர் சிலர், முகக்கவசங்களை வாங்கி தங்களின் தாய்நாட்டிற்கு அனுப்பத் தொடங்கியுள்ளனர். சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா கிருமித் தொற்று சம்பவங்களுக்கு இடையே, பல பகுதிகளில் முகக் கவசங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிங்கப்பூரில் உள்ள சீன நாட்டவர் தங்களின் உறவுகளுக்காக முகக்கவசங்களை வாங்கி அனுப்பி வருவதாகக் கூறப்படுகிறது. சீனப் புத்தாண்டுக்காக தாயகம் திரும்புவோரும் தங்களுடன் முகக் கவசங்களைக் கொண்டு செல்கின்றனராம். பெரும்பாலானோர் ‘N95’ வகை முகக்கவசங்களைப் பெட்டி பெட்டியாக வாங்கிக்கொண்டு செல்வதாக அறியப்படுகிறது.