பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் சிறுகதைப் போட்டி, மரபுக்கவிதைப் போட்டி

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் இந்த ஆண்டு முத்தமிழ் விழாவை வழக்கம்போல் தமிழ்மொழி விழாவின் ஒரு பகுதியாக வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி (சனிக்கிழமை) நடத்தவிருக்கிறது. 

முத்தமிழ் விழாவை ஒட்டி ஆண்டுதோறும் பொதுமக்களுக்கு இலக்கியப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆகவே, இந்த ஆண்டும் வழக்கம்போல் சிறுகதைப் போட்டி நடத்தப்படும். 

இந்த ஆண்டு நடைபெற இருக்கும் முத்தமிழ் விழா, வெள்ளி விழாவாக (25ஆம் ஆண்டு) நடைபெற இருப்பதால், பொதுமக்களுக்கு சிறப்புப் போட்டியாக மரபுக்கவிதைப் போட்டியும் நடத்தப்படும்.

அத்துடன், பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தனியாகச் சிறுகதைப் போட்டி நடத்தப்படும். சிங்கப்பூரில் உள்ள எந்தப் பல்கலைக்கழக மாணவரும், தொடக்கக் கல்லூரி, பலதுறைத் தொழிற்கல்லூரி நிலைக்கு மேலுள்ள கல்வி கழக மாணவரும் இந்தச் சிறுகதைப் போட்டியில் கலந்துகொள்ளலாம். இந்த மாணவர்கள் பொதுமக்களுக்கு நடத்தப்படும் மரபுக்கவிதைப் போட்டியிலும் கலந்துகொள்ளலாம்.

அனைத்துப் போட்டிகளுக்கும் படைப்புகள் வந்து சேரவேண்டிய இறுதி நாள்: 29.02.2020

பல்கலைக்கழக மாணவர்களுக்கான சிறுகதைப் போட்டிப் பரிசுகள்

முதல் பரிசு $300; 2ஆம் பரிசு $200; 3ஆம் பரிசு $100. 3 ஊக்கப் பரிசுகள் ஒவ்வொன்றும் $75.

பொதுமக்களுக்கான சிறுகதைப் போட்டிப் பரிசுகள் 

முதல் பரிசு $500; 2ஆம் பரிசு $300; 3ஆம் பரிசு $200. 3 ஊக்கப் பரிசுகள் ஒவ்வொன்றும் $100.

பொதுமக்களுக்கான கவிதைப் போட்டிப் பரிசுகள் 

முதல் பரிசு $300; 2ஆம் பரிசு $200; 3ஆம் பரிசு $100. 3 ஊக்கப் பரிசுகள் ஒவ்வொன்றும் $75.

போட்டி குறித்த நடுவர்களின் முடிவே இறுதியானது.

போட்டி முடிவுகள் ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி நடக்க இருக்கும் முத்தமிழ் விழாவில் வெளியிடப்படும். இதற்கிடையே, முடிவுகள் குறித்து எந்த விசாரணைகளுக்கும் பதில் இராது.

சிறுகதைகளையும் மரபுக்கவிதைகளையும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், Mr. Suba. Arunachalam, APT BLK 701 West Coast Road #11-325, Singapore 120701 எனும் முகவரிக்கு 29.02.2020க்குள் வந்து கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். மேல் விவரங்களுக்கு செயலாளர் திருமதி கிருத்திகா (kiruthikavirku@gmail.com), துணைச் செயலாளர் திரு. கோ.இளங்கோவன் (9121 6494) அல்லது பொருளாளர் திரு. மாணிக்கம் கண்ணப்பன் (9638 2656) ஆகியோரைத் தொடர்புகொள்ளலாம்.