லாரன்ஸ் வோங்: சார்சைவிட மோசமானதாக இருக்கக்கூடும்

2003ஆம் ஆண்டில் சிங்கப்பூர் உட்பட பல நாடுகளை உலுக்கிய சார்ஸ் நோயைவிட தற்போது வேகமாகப் பரவி வரும் வூஹான் கிருமித் தொற்று மோசமானதாக இருக்கக்கூடும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்று முன்தினம் தெரிவித்தார். ஆனால் இதுகுறித்து தற்போது துல்லியமாகக் கூற இயலாது என்று வூஹான் கிருமித் தொற்றை எதிர்கொள்ள அமைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள்நிலை பணிக்குழுவின் இணைத் தலைவருமான திரு வோங் தெரிவித்தார்.

“சார்ஸ் நோயைப் போல வூஹான் கிருமி மிக எளிதில் பரவக்கூடியதல்ல என்று தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

“வூஹான் கிருமித் தொற்றால் ஏற்பட்டுள்ள மரண எண்ணிக்கை தற்போது குறைவாக உள்ளது.

“ஆனால் நிலைமை மிக விரைவாக மாறி வருகிறது. வூஹான் கிருமியின் வீரியம் அதிகரித்து வருவதாக சீன அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயரும் சாத்தியம் இருக்கிறது. எனவே, வூஹான் கிருமித் தொற்று சார்ஸ் நோயைவிட மோசமானதாக இருக்கக்கூடும் என நாம் மனதளவில் தயாராக இருக்க வேண்டும்,” என்றார் அமைச்சர் வோங். 2003ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் சார்ஸ் நோயால் 238 பேர் பாதிக்கப்பட்டனர். அந்த நோயின் காரணமாக சிங்கப்பூரில் 33 பேர் மரணம் அடைந்தனர். மாண்டோரில் மருத்துவர்களும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களும் அடங்குவர். சார்சுக்குப் பிறகு கிருமித் தொற்றுகளுக்கு எதிராகச் செயல்பட சிங்கப்பூர் தயாராக இருப்பதாக திரு வோங் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!