சிங்கப்பூரின் சுற்றுப்பயணத்துறை பாதிப்படையக்கூடும்

சிங்கப்பூரின் சுற்றுப்பயணத்துறை பாதிப்படையக்கூடும்

1 mins read

வூஹான் கிருமித் தொற்றின் காரணமாக சிங்கப்பூரின் சுற்றுப்பயணத்துறை பாதிப்படையக்கூடும் என்று பொருளியல் நிபுணர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

இதனால் இவ்வாண்டின் முதல் காலாண்டில் சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி மெதுவடையக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. வூஹான் கிருமித் தொற்று காரணமாக நிச்சயமற்ற சூழ்நிலை நிலவும்போதிலும் சிங்கப்பூரின் இவ்வாண்டுக்கான ஒட்டுமொத்த பொருளியல் எவ்வாறு பாதிப்படையும் என்பது குறித்து தற்போதைக்கு முன்னுரைக்க முடியவில்லை என்று சேனல் நியூஸ் ஏஷியாவிடம் அவர்கள் தெரிவித்தனர்.

வூஹான் கிருமித் தொற்றின் விளைவாக சிங்கப்பூரின் இவ்வாண்டு பொருளியல், வர்த்தகம், பயனீட்டாளர் தன்னம்பிக்கை ஆகியவை பாதிப்படையும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சுற்றுப்பயணத்துறை தொடர்பான பிரிவுகள் ஆக அதிகமாகப் பாதிப்படையக்கூடும் என்றார் அவர். சிங்கப்பூருக்கு வரும் சுற்றுப்பயணிகளில் ஐந்தில் ஒருவர் சீன நாட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.