சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் புதிய தலைமையகம் புக்கிட் தீமாவில் அமைந்திருப்பது, நாட்டின் மற்ற பகுதிகளிலும் கட்சி கிளைபரப்ப நல்ல தளம் அமைத்துக் கொடுத்துள்ளது என்று அக்கட்சியின் தலைமைச் செயலாளர் டாக்டர் டான் செங் போக் தெரிவித்து இருக்கிறார். அதே நேரத்தில், வரும் பொதுத் தேர்தலில் சிங்கப்பூர்் முன்னேற்றக் கட்சி போட்டியிட விரும்புவதை இது கோடிகாட்டுகிறதா என்ற கேள்விக்குப் பதில் அளிப்பதை டாக்டர் டான் தவிர்த்துவிட்டார்.
புக்கிட் தீமா கடைத் தொகுதியின் 14ஆம் தளத்தில் நேற்று நடந்த கட்சித் தலைமையக அறிமுக நிகழ்ச்சி இடம்பெற்றது.
"தலைமையகம் அமைந்துள்ள இடம் மிகவும் முக்கியமானது. இந்த மையப் புள்ளியில் இருந்து நாட்டின் மற்ற எல்லாப் பகுதிகளுக்கும் சென்று வர முடியும். அவ்வகையில், உண்மையிலேயே இதுதான் பொருத்தமான இடம் என நான் கண்டறிந்தேன்," என்றார் டாக்டர் டான்.
அடுத்த பொதுத் தேர்தலில் வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியில் அவர் களமிறங்கக்கூடும் என்றும் பேச்சு அடிபடுகிறது.

