லெங்கோக் பாருவில் அபாயகரமான ஆயுதத்தால் தாக்கியதாக ஆடவர் கைது

லெங்கோக் பாருவில் அபாயகரமான ஆயுதத்தால் தாக்கியதாக ஆடவர் கைது

1 mins read
e62e97e0-26a1-4760-bcfa-f98deb99fab8
கிளமென்டி போலிஸ் பிரிவு அதிகாரிகள் தாக்குதலில் ஈடுபட்ட நபரை அடையாளம் கண்டு அதே நாளில் அவரைக் கைது செய்தனர். -

அபாயகரமான ஆயுதத்தைக்கொண்டு வேண்டுமென்றே காயம் ஏற்படுத்தியதற்காக லெங்கோக் பாருவில் 24 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.

நேற்று (ஜனவரி 28) அதிகாலை 2.50 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர்.

தாக்கப்பட்டவரின் கையில் காயங்கள் இருந்தன.

கிளமென்டி போலிஸ் பிரிவு அதிகாரிகள் தாக்குதலில் ஈடுபட்ட நபரை அடையாளம் கண்டு அதே நாளில் அவரைக் கைது செய்தனர்.

அபாயகரமான ஆயுதத்தைக் கொண்டு தாக்கியதாக அந்த ஆடவர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழாண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம், பிரம்படி போன்றவை விதிக்கப்படலாம்.

சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலிசார் தெரிவித்தனர்.

#தமிழ்முரசு #அபாயகரமானஆயுதத்தால்தாக்கி #லெங்கோக்பாரு

குறிப்புச் சொற்கள்