'ஓ' நிலை மாணவர்கள் பள்ளி சேர்க்கை விவரம் பிப்ரவரி 4ல்

'ஓ' நிலை மாணவர்கள் பள்ளி சேர்க்கை விவரம் பிப்ரவரி 4ல்

1 mins read

சாதாரண நிலை தேர்வு முடிவுகளை அண்மையில் பெற்றுக்கொண்ட உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் அடுத்து எங்கு பயிலப்போகிறார்கள் என்ற விவரம் அடுத்த மாதம் 4ஆம் தேதி தெரிவிக்கப்படும்.

இவ்வாண்டுக்கான பள்ளி சேர்க்கை விவரங்கள் அடுத்த மாதம் 4ஆம் தேதியன்று காலை 9 மணியிலிருந்து வெளியிடப்படும்.

முடிவுகள் மாணவர்களுக்குக் குறுந்தகவல் மூலம் அனுப்பிவைக்கப்படும்.

கூட்டுப் பள்ளி சேர்க்கைக்கான இணையத்தளத்துக்குச் சென்றும் பள்ளி சேர்க்கை முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.

மில்லேனியா கல்விக் கழகம் அல்லது தொடக்கக்கல்லூரிகளில் இடம்பிடிக்கும் மாணவர்கள், முடிவுகள் கிடைத்த மறுநாள் காலை 7.30 மணிக்கு அந்தந்த பள்ளிகளுக்குச் சென்று பதிவு செய்ய வேண்டும். பலதுறை தொழிற்கல்லூரி அல்லது தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் இடம்பிடிக்கும் மாணவர்களுக்கு மாணவர் சேர்க்கை தொகுப்பு தபால் மூலம் அனுப்பிவைக்கப்படும்.

அந்தத் தொகுப்பில் கூடுதல் விவரங்கள் இடம்பெறும். வேறொரு தொடக்கக்கல்லூரிக்கு மாற மேல்முறையீடு செய்ய விரும்புவோர் அந்தந்த கல்லூரிகளுக்கு நேரில் செல்ல வேண்டும்.