பொதுச் சேவை ஆணையத்தின் புது துணைத் தலைவர் நியமனம்

பொதுச் சேவை ஆணையத்தின் புது துணைத் தலைவர் நியமனம்

1 mins read
acffca0f-f2ee-4cd9-9038-5102eef7e454
பொதுச் சேவை ஆணையத்தின் புதிய துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற திருவாட்டி சுவா சோக் கூன். படம்: சிங்டெல் -

பொதுச் சேவை ஆணையத்தின் புதிய துணைத் தலைவராக திருவாட்டி சுவா சோக் கூன் நியமிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் அலுவலகம் நேற்று அறிவித்தது.

ஆணையத்தின் உறுப்பினராகவும் துணைத் தலைவராகவும் 62 வயது திருவாட்டி சுவா தமது பணியை நேற்று தொடங்கினார்.

பொதுச் சேவை ஆணையத்தின் முதல் பெண் துணைத் தலைவர் எனும் பெருமை இவரைச் சேரும்.

இவர் ஆணையத்தின் இரண்டாவது துணைத் தலைவராவார்.

ஆணையத்தின் இன்னொரு துணைத் தலைவரான 73 வயது திரு குவா சோங் செங்குடன் இணைந்து திருவாட்டி சுவா செயல்படுவார். திருகுவா சிங்கப்பூர் டெக்னோலஜிஸ் என்ஜினியரிங்கின் தலைவருமாவார்.

பொதுச் சேவை ஆணையத்தின் தலைவர் 65 வயது திரு லீ சூ யாங்.

திருவாட்டி சுவா சிங்டெல் குழும நிர்வாக அதிகாரியுமாவார்.

இவர் சிங்டெல், பார்தி ஏர்டெல், பார்தி டெலிகோம், தற்காப்பு அறிவியல், தொழில்நுட்ப ஆணையம், கேப் விஸ்டா, சிங்டெல் குழுமத்தின் முக்கிய துணை நிறுவனங்கள் ஆகியவற்றின் இயக்குநர் சபைகளின் உறுப்பினருமாவார்.

பொதுச் சேவை ஆணையத்தில் 11 ஆண்டுகள் சேவையாற்றிய திரு ரிச்சர்ட் ஆர் மெக்னஸ் நேற்று ஓய்வு பெற்றார்.

பொதுச் சேவை ஆணையத்தில் 30 ஆண்டுகள் சேவையாற்றிய 79 வயது திரு டான் யாம் பின் நாளை ஓய்வு பெறுகிறார்.

இவர் ஆணையத்தின் துணைத் தலைவராக கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாகச் சேவையாற்றினார்.