2019 முடிவில் நிலவரம்: வேலை பார்த்த சிங்கப்பூரர்கள் அதிகம்

பொருளியல் நிலவரங்கள் சரியில்லை என்றாலும், புதிய வேலை வாய்ப்புகள் அதிகரிப்பு மெதுவாக இருந்தாலும் சென்ற ஆண்டு முடிவில் வேலை பார்த்த சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை முன்பைவிட அதிகமாக இருந்தது.

சிங்கப்பூரர்களுக்கான வருடாந்திர சராசரி வேலையின்மை விகிதம் 2018ல் 3 விழுக்காடாக இருந்தது. அது சென்ற ஆண்டில் 3.3 விழுக்காடாகக் கூடியது.

மனிதவள அமைச்சு வெளியிட்ட பூர்வாங்க புள்ளிவிவரங்கள் இவ்வாறு தெரிவிக்கின்றன.

குடிமக்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் உரிய வேலையின்மை விகிதம் 2018ல் 2.9 விழுக்காடாக இருந்தது. அது சென்ற ஆண்டில் 3.2 விழுக்காடாகக் கூடியது.

வெளிநாட்டினரையும் சேர்த்து மொத்தமாகப் பார்க்கையில் வேலையின்மை விகிதம் 2.1 விழுக்காட்டிலிருந்து 2019ல் 2.3 விழுக்காடாக அதிகரித்து உள்ளது.

அதேபோல, மொத்த ஊழியர்களைச் சேர்த்து பார்க்கையில் சென்ற ஆண்டில் ஆட்குறைப்பு 10,700 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை 2018ல் 10,730. இருந்தாலும் சென்ற ஆண்டின் 3வது மற்றும் 4வது காலாண்டில் ஆட்குறைப்பு கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

மனிதவள அமைச்சர் ஜோசஃப்பின் டியோ நேற்று செய்தியாளர்கள் மாநாட்டில் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.

சென்ற ஆண்டு நிலவிய வேலையின்மை விகிதம் கவலை தருவதாக இருக்கிறது என்றாலும் அபாயச் சங்கு ஊதும் அளவுக்கு அது இல்லை என்றார் அவர்.

குடிமக்கள், நிரந்தரவாசிகளுக்கான வேலையின்மை விகிதங்கள் கடந்த 10 ஆண்டுகளாகவே ஏறக்குறைய 3 விழுக்காட்டு அளவிலேயே இருந்து வருவதை அவர் சுட்டினார்.

சென்ற ஆண்டின் வேலை வாய்ப்புகளில் ஏற்பட்ட அதிகரிப்பு எதிர்பார்க்கப்பட்டதைவிட சிறப்பாக இருந்ததாகவும் அவர் கூறினார்.

மொத்தத்தில் பார்க்கையில், சென்ற ஆண்டு முடிவில் வேலையில் இருந்த குடிமக்கள், நிரந்தரவாசிகளின் எண்ணிக்கை 26,500 ஆக இருந்தது. என்றாலும் இந்த எண்ணிக்கை 2018ல் 27,400 என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டு வேலை பணிப்பெண்களைச் சேர்க்காமல் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் 28,700 ஆக இருந்தன.

சென்ற ஆண்டு முடிவில் மொத்தத்தில் மேலும் 55,200 பேர் வேலையில் சேர்க்கப்பட்டனர். 2014க்குப் பிறகு இதுவே ஆக அதிக வருடாந்திர வளர்ச்சி ஆகும்.

நிபுணர்கள், நிர்வாகிகள், மேலாளர்கள், தொழில்நுட்பர்கள் ஆகியோருக்கான சராசரி வருமானம், மொத்த ஊழியர் அணியுடன் ஒப்பிடுகையில் வேகமாகக் கூடியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!