மத்திய கிழக்கு அமைதி முயற்சி: சிங்கப்பூர் வரவேற்பு

1 mins read
5d23cc63-e13a-4b31-b43d-52d83c751f83
வா‌ஷிங்டனில் நடந்த மத்திய கிழக்கு அமைதித் திட்ட அறிவிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின், நெட்டன்யாகுவும். படம்: ஏஎப்பி -

அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள இஸ்ரேல்-பாலஸ்தீன அமைதித் திட்டம் உட்பட, மத்திய கிழக்கு அமைதி முயற்சியை முன்னெடுத்துச் செல்வதற்கு அனைத்துலக சமூகம் எடுக்கும் எல்லா முயற்சிகளையும் தான் வரவேற்பதாக சிங்கப்பூர் தெரிவித்து இருக்கிறது.

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இரண்டும் அமைதி, பாதுகாப்புடன் அருகருகே வாழ்வதற்குப் பேச்சுவார்த்தை மூலம் இரு தரப்பு தீர்வு காண்பதற்கு ஆதரவு அளிப்பதே சிங்கப்பூரின் நிலை என்று வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

நேரடிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கி இரு தரப்புகளும் நீடித்த தீர்வைக் காணும் என்று தான் நம்புவதாக வும் சிங்கப்பூர் தெரிவித்தது.