சீனாவுக்குப் பயணம் போகாத சிங்கப்பூரர்கள் வூஹான் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சிங்கப்பூரில் போதுமான முகக்கவசம் இல்லை என்றும் பரவிய தகவல்கள் வதந்தி என்றும் அவற்றில் உண்மை இல்லை என்றும் அரசாங்கம் கூறி உள்ளது. சீனாவுக்குச் செல்லாத ஐந்து சிங்கப்பூரர்
களை வூஹான் கொரோனா கிருமித்தொற்றி உள்ளதாக எபி-டிசி சிட்டி நியூஸ் என்னும் இணையத்தளம் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது.
இந்தத் தகவலை எதிர்த்தரப்பு தலைவரும் வழக்கறிஞருமான லிம் டியன் பகிர்ந்தார். 'சே நோ டு பிஏபி' என்னும் ஃபேஸ்புக் குழுவும் அந்தத் தகவலை ஃபேஸ்புக் வாயிலாகப் பகிர்ந்தது.இவர்கள் தங்களது பதிவுகளில் திருத்தம் வெளியிட வேண்டும் என சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் நேற்று உத்தரவிட்டார். பொய்ச் செய்தி பதிவு களை தங்களது ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து நீக்கிவிட்ட போதிலும் திருத்தம் வெளி யிட அவர்கள் கடமைப்பட்டு உள்ளதாக பொய்ச்செய்திக் கும் சூழ்ச்சித்திறத்துக்கும் எதிரான பாதுகாப்புச் சட்ட (பொஃப்மா) அலுவலகம் தெரிவித்துள்ளது.

