தைப்பூசம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற பக்தர்களுக்கு வேண்டுகோள்

தைப்பூசம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற பக்தர்களுக்கு வேண்டுகோள்

1 mins read
dff96e8a-0022-45bb-a86f-ef7fb5d61e3c
வூஹான் கொரோனா கிருமித்தொற்று தொடர்பாக தைப்பூச பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தைப்பூச விழா ஏற்பாட்டாளர்கள் அறிவித்து உள்ளனர். படம்: த. கவி -

வூஹான் கொரோனா கிருமித்தொற்று தொடர்பாக தைப்பூச பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தைப்பூச விழா ஏற்பாட்டாளர்கள் அறிவித்து உள்ளனர்.

உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பின் ஸ்ரீஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலிலோ ஸ்ரீதெண்டாயுதபாணி கோயிலிலோ தைப்பூச விழாவில் பங்கேற்பதையும் பார்வையிடுவதையும் தவிர்ப்பதோடு உடனடியாக மருத்துவரைக் காணவேண்டும் என்பதும் அந்த நடவடிக்கைகளுள் அடங்கும்.

முடிந்தால் உச்சக்கட்ட நேரங்களான நள்ளிரவுக்கும் பின்னிரவு 2 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தையும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையிலான நேரத்தையும் பக்தர்களும் பார்வையாளர்களும் தவிர்க்க வேண்டும்.

இருமல், சளி இருந்தால் முகக்கவசம் அணிய வேண்டும்.

இருமல், தும்மல் ஏற்பட்டால் டிஷ்யூ தாள் மூலம் வாயை மூடுவதோடு அந்த டிஷ்யூ தாளை உடனடியாக குப்பைத்தொட்டியில் அப்புறப்படுத்த வேண்டும்.

கைகளை அடிக்கடி சோப்புப் போட்டு கழுவ வேண்டும் அல்லது கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ள ஏற்பாட்டாளர்கள், ஊர்வலப் பாதையின் வழிநெடுக பயிற்சி பெற்ற தொண்டூழியர்கள் இருப்பார்கள் என்றும் உடல்நலமில்லை எனில் உதவிக்கு அவர்களை நாடலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

தைப்பூச விழாவின் தொடர்பில் மாற்றங்கள் ஏதும் இருப்பின், சுகாதார அமைச்சின் ஆக அண்மைய ஆலோசனைக்கு ஏற்ப அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

#தமிழ்முரசு #வூஹான் #பாதுகாப்புஏற்பாடுகள் #தைப்பூசம்

குறிப்புச் சொற்கள்