நெருக்கடிநிலையிலும் சிறப்பாகப் பணியாற்றும் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய அதிகாரிகள்

வூஹான் கொரோனா கிருமித் தொற்று காரணமாக நெருக்கடிநிலை ஏற்பட்டுள்ள போதிலும் சிங்கப்பூரின் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தின் அதிகாரிகள் மிகவும் சிறப்பாகப் பணியாற்றி வருவதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் புகழாரம் சூட்டியுள்ளார்.

வூஹான் கொரோனா கிருமித் தொற்று பரவாமல் இருக்க சிங்கப்பூரில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பரிசோதனை முறைகளும் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அதற்கேற்ப, குடிநுழைவு அதிகாரிகளும் செவ்வனே செயல்படுகின்றனர்.

“பயணிகளின் பயண வரலாறு, நோய்க்கான அறிகுறிகள் அவர்

களிடம் தென்படுகிறதா என்பதைக் கண்டறிய கூடுதல் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கூடுதல் மனிதவளம் இல்லாதபோதிலும் இதைச் செய்ய வேண்டியுள்ளது. இதுதான் உண்மை நிலவரம்.

இருப்பினும், நடைமுறைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் சுமுகமாக நடந்துகொண்டிருக்கின்றன. வேலைப் பளு அதிகரித்தும் எங்களது அதிகாரிகள் அற்புதமாகப் பணியாற்றி வருகின்றனர்,” என்று அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.

உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடிக்கு அமைச்சர் சண்முகம் நேற்று சென்றிருந்தார். அங்கு பயணி

களின் உடல் வெப்பநிலையைப் பரிசோதிக்க நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நடவடிக்கையை அவர் நேரில் பார்வையிட்டு தமது ஆதரவை வழங்கினார்.

உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளில் பயணிகளின் உடல்வெப்பநிலையைப் பரிசோதிக்கும் நடவடிக்கையை குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் கடந்த வெள்ளிக்கிழமையன்று தொடங்கியது.

கார், பேருந்து, ரயில், லாரி ஆகியவற்றில் பயணம் செய்வோரின் உடல்வெப்பநிலையைப் பரிசோதிக்கும் நடவடிக்கை நடைமுறையில் உள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணம் செய்பவர்களில் உடல்வெப்பநிலையும் கூடிய விரைவில் பரிசோதிக்கப்படும்.

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே பேருந்தில் பயணம் செய்வோரின் உடல்வெப்பநிலை குடிநுழைவு முனையத்துக்கு முன்பு பயணிகள் இறங்கும் இடத்தில் பரிசோதனை செய்யப்படும். பேருந்து ஓட்டுநர்களின் உடல்வெப்பநிலை பாதுகாப்புச் சோதனை இடத்தில் பரிசோதிக்கப்படும்.

ரயில் பயணிகளின் உடல்வெப்பநிலை குடிநுழைவு முனையத்துக்குச் செல்வதற்கு முன்பு அவர்கள் இறங்கும் தளமேடையில் பரிசோதிக்கப்படும். குடிநுழைவு முனையத்தை அடைவதற்கு முன்பு காரில் பயணம் செய்வோர் அவர்களது கார் கண்ணாடிகளை இறக்கிவிட வேண்டும். அதையடுத்து, அவர்களது உடல்வெப்பநிலை பரிசோதிக்கப்படும். மோட்டார் சைக்கிளில் பயணம் செய்வோர் தங்களது தலைக்கவசங்களைக் கழற்ற வேண்டும். லாரியில் பயணம் செய்வோரின் உடல்வெப்பநிலை சோதனைச்சாவடிகளில் உள்ள சரக்குத் தளமேடைகளில் அல்லது குடிநுழைவு முனையங்களில் பரிசோதிக்கப்படும்.

முகக்கவசங்கள் அணிய வேண்டாம் என்று சிங்கப்பூரில் உள்ள விமான நிலையங்களிலும் நிலவழிச் சோதனைச்சாவடிகளிலும் சுங்கச்சாவடிகள், வாடிக்கையாளர் சேவை முனையங்கள் ஆகியவற்றிலும் பணியாற்றும் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக்கில் வலம் வரும் புரளிகள் யாவும் பொய் என அமைச்சர் சண்முகம் தெளிவுப்படுத்தினார்.

பொதுமக்களைச் சந்திக்கும் மற்ற முன்வரிசை அரசாங்க அதிகாரிகளைப் போலவே குடிநுழைவு, சோதனைச்சாவடி அதிகாரிகளுக்கும் ஒரே மாதிரியான விதிமுறை அமைக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். அதாவது, உடல்நலம் சரியில்லாமல் இருந்தால் அவர்கள் வேலைக்கு வரக்கூடாது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!