பாதிக்கப்பட்டோர் குணமடைய பலசமய சிறப்பு வழிபாடு

1 mins read

வூஹான் கிருமித் தொற்றால் பாதிப்படைந்தோர் குணமடைய வேண்டும் என வேண்டி சிங்கப்பூரின் அனைத்து சமய மன்றம் நேற்று சிறப்பு வழிபாடு நடத்தியது.

இந்து, யூத, சோரோஎஸ்திரியன், பௌத்த, தாவோயிஸ்ட், கிறிஸ்துவ, இஸ்லாம், சீக்கிய, பாஹாய் ஆகிய சமயங்களைச் சேர்ந்த சமயத் தலைவர்கள் ஒன்று கூடி வழிபட்டனர். ஹூஹான் கொரோனா கிருமித் தொற்றுக்கு எதிரான போரில் மிகுந்த துணிச்சலுடன் களமிறங்கியுள்ள சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்களின் நலனக்காகவும் சமயத் தலைவர்கள் வேண்டிக்கொண்டனர்.