துணைப்பாட நிலையத்தில் தம்மிடம் பாடம் கற்க வந்த தொடக்கப் பள்ளி மாணவியுடன் பழக்கமேற்படுத்திக்கொண்டு, பாலியல் உறவு கொண்ட துணைப்பாட ஆசிரியருக்கு பத்தாண்டுகளும் பத்து மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன், இப்போது 43 வயதாகும் அந்த ஆடவருக்கு பத்துப் பிரம்படிகளும் கிடைக்கும். 2017ல் அறிமுகமானபோது அந்தச் சிறுமிக்கு வயது 11 மட்டுமே. 2018 டிசம்பர் மாதத்தில் அந்தச் சிறுமியின் ஒப்புதலுடன் இருமுறை உறவுகொண்டதை அந்த ஆடவர் ஒப்புக்கொண்டார்.
மாணவியுடன் உறவு: துணைப்பாட ஆசிரியருக்குச் சிறை, பிரம்படி
1 mins read

