கார், மோட்டார்சைக்கிளுக்கான 'சிஓஇ' சரிவு

கார், மோட்டார்சைக்கிளுக்கான 'சிஓஇ' சரிவு

1 mins read

கொரோனா கிருமித்தொற்று எதிராலியாக கார்கள் மற்றும் மோட்டார்சைக்கிளுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணங்கள் வெகுவாகக் குறைந்தன.

முந்தைய ஏலக்குத்தகையில் $35,010ஆக இருந்த 1600சிசி மற்றும் அதற்குக் குறைவான கார்களுக்கான 'சிஓஇ' கட்டணம் நேற்றைய ஏலக்குத்தகையில் $30,010 ஆகச் சரிவுகண்டது. அதேபோல, 1600சிசிக்கு மேற்பட்ட கார்களுக்கான 'சிஓஇ' கட்டணமும் $6,805 குறைந்து, $30,890ஆனது.

மோட்டார்சைக்கிள்களைப் பொறுத்தமட்டில், 'சிஓஇ' கட்டணம் $4,610லிருந்து $4,401ஆகக் குறைந்தது. பொதுப் பிரிவு வாகனங்களுக்கான 'சிஓஇ' கட்டணமும் $2,600 குறைந்து, $34,900ஆனது.

வர்த்தக வாகனங்களுக்கான 'சிஓஇ' மட்டும் ஏற்றம் கண்டது. முந்தைய ஏலக்குத்தகையில் 25,001 ஆக இருந்த வர்த்தக வாகனங்களுக்கான 'சிஓஇ' கட்டணம் அண்மைய ஏலக்குத்தகையில் $25,013 என சற்றே அதிகரித்தது.