அதிக மறுவிற்பனை வீடுகள் விற்கப்பட்டன

அதிக மறுவிற்பனை வீடுகள் விற்கப்பட்டன

1 mins read
edc7fcb9-4c53-4def-9a8a-aa02b528f904
-

வீடமைப்பு வளர்ச்சி கழக மறுவிற்பனை வீடுகளின் விற்பனை கூடியுள்ளது. கடந்த மாதம் மொத்தம் 1,920 மறுவிற்பனை வீடுகள் விற்கப்பட்டன. இது கடந்தாண்டு டிசம்பர் மாதத்தைக் காட்டிலும் 3.3 விழுக்காடு அதிகம். நவம்பர் மாதத்துடன் ஒப்புநோக்க டிசம்பர் மாத விற்பனை 3 விழுக்காடு குறைந்தது.

அதுமட்டுமின்றி, டிசம்பர் மாதத்தைக் காட்டிலும் கடந்த மாதத்தின் வீட்டு விலைகள் 0.5 விழுக்காடு உயர்ந்தன.

கடந்த மாத விற்பனை 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விற்கப்பட்ட 1,560 வீடுகளைக் காட்டிலும் 23.1 விழுக்காடு அதிகம்.