ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு போதைப்பொருள் புழங்கிகளின் எண்ணிக்கை உயர்வு

ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு போதைப்பொருள் புழங்கிகளின் எண்ணிக்கை உயர்வு

1 mins read
d8525f7e-35ae-4ec8-8a73-56e2b79350a5
-

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் அதிகமான போதைப்பொருள் புழங்கிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்தாண்டு 3,524 போதைப்பொருள் புழங்கிகள் பிடிப்பட்டனர். கடந்த ஆறு ஆண்டுகளில் ஆக உயர்வான இந்த எண்ணிக்கை ,2018ஆம் ஆண்டின் எண்ணிக்கையைக் காட்டிலும் 2 விழுக்காடு அதிகம்.

கைதானவர்களில் மெட்டம்பெட்டமின், போதைமிகு அபின் மற்றும் என்பிஎஸ் எனப்படும் புதிய வகையான போதைப்பொருட்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கூடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டில் கைது செய்யப்பட்ட போதைப்புழங்கிகளில் 63 விழுக்காட்டினர் மெட்டம்பெட்டமின்னையும் 19 விழுக்காட்டினர் போதைமிகு அபினையும் பயன்படுத்தினர். பன்னிரண்டு விழுக்காட்டினர் என்பிஎஸ் புழங்கிகள்.