சிங்கப்பூரில் ஏற்பட்டுள்ள கொரோனா கிருமித் தொற்று மஞ்சள் விழிப்புநிலை பிரிவில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, பொதுமக்களின் வாழ்க்கைமுறை வழக்கம் போல் இருக்கலாம்.
ஆனால் சிங்கப்பூரில் கொரோனா கிருமி அதிக அளவில் பரவினால், நிலைமை ஆரஞ்சு விழிப்புநிலைக்கு மாறும் சாத்தியம் இருப்பதாக சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
ஆரஞ்சு விழிப்புநிலை சிவப்பு விழிப்புநிலைக்கு ஒருபடி கீழே இருக்கிறது. சிவப்பு விழிப்புநிலை என்றால் கட்டுக்கடங்காத வகையில் கிருமி பரவுவதாக அர்த்தம்.
சிங்கப்பூரில் தற்போது மஞ்சள் விழிப்புநிலை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் ஆரஞ்சு விழிப்புநிலையின்போது எடுக்கப்படும் தனிமைப்படுத்துதல், உடல்வெப்பநிலை பரிசோதனை போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

