கொரோனா கிருமி பற்றி பள்ளிகளில் விழிப்புணர்வு

1 mins read

நாட்டில் நிலவி வரும் கொரோனா கிருமித் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரத் தொடங்கிவிட்டன. பள்ளிகளில் இந்நடவடிக்கைகளை நடத்த கல்வி அமைச்சு ஒரு பாடத் தொகுப்பை அறிமுகம் செய்துள்ளது. காலையில் மண்டபத்தில் கூடாமல் மாணவர்கள் அவரவர் வகுப்பறை களுக்குச் சென்று தேசிய கீதத்தைப் பாடுவது, வெப்ப நிலையைச் சோதித்துக்கொள்வது என பள்ளிகள் மாற்றங்கள் செய்துள்ளன. அத்துடன் மேல் தொடக்க நிலைகளில் படிக்கும் மாணவர்களுக்குக் கிருமி தொடர் பான பொய்ச் செய்திகளைக் கண்டறியும் பாடமும் கற்றுத் தரப்படுகிறது.