நாட்டில் அளவுக்கு அதிகமான வாடகை வாகனங்கள் இருக்கும் நிலையில், தற்போது பரவிவரும் கொரோனா கிருமித் தொற்று நிலைமையை மேலும் மோசம் ஆக்கியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் டாக்சி ஓட்டுநர்களின் வருமானம் 25 விழுக்காட்டுக்கு மேல் குறைந்தது என்றும் தனியார் வாடகை வாகன ஓட்டுநர்களின் வருமானம் 30 விழுக்காட்டுக்கு மேல் குறைந்தது என்றும் தேசிய டாக்சி சங்கம் மற்றும் தேசிய தனியார் வாடகை வாகனங்கள் சங்கம் ஆகியவற்றின் ஆலோசகர் திரு அங் ஹின் கீ தெரிவித்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் பயணிகளின் அச்சத்தைப் போக்க முடியும் என்றும் திரு அங் குறிப்பிட்டார்.
டாக்சி, தனியார் வாடகை வண்டி ஓட்டுநர்களுக்கு வருமானம் இழப்பு
1 mins read

