ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் பொருட்கள் வாங்க கட்டுப்பாடு

சிங்கப்பூரில் உள்ள ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் ஒரு சில அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க வாடிக்கையாளர்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக ஃபேர்பிரைஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேரங்காடிகளில் பொருட்கள் விற்றுத் தீர்ந்ததையடுத்து அவை அடுக்குகளில் மீண்டும் நிரப்பப்பட்டாலும் கூடுதலானோர் இப்பொருட்களை வாங்க இருப்பு இருப்பதை உறுதிசெய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாடிக்கையாளரும் நான்கு பாக்கெட்டுகள் வரையிலான திசுத் தாட்கள் உள்ளிட்ட காகிதப் பொருட்கள், இரு பைகள் வரையிலான அரிசி, நான்கு பாக்கெட்டுகள் வரையிலான உடனடி நூடல்ஸ் ஆகியவற்றை வாங்க முடியும். அதுபோக, $50 மதிப்பு வரையிலான காய்கறிகளை ஒருவர் வாங்க முடியும்.

ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளுக்கு வெளியே ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸ் மூலம் இந்தக் கட்டுப்பாடுகள் வாடிக்கையாளர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளன.

தினசரி தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ள போதிலும், அவற்றின் இருப்பு போதுமான அளவில் இருப்பதாக அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருள் சேமிப்புக் கிடங்குகளுக்கும் பேரங்காடிகளுக்கும் இடையே பொருள் விநியோகம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“தேவைக்கேற்ப பொருட்களை வாங்குமாறும் தேவைக்கு அதிகமாக அவற்றை வாங்கி குவிக்கவேண்டாம் எனவும் வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொள்கிறோம்,” என்று நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே கருத்தைப் பிரதிபலித்த ஃபேர்பிரைஸ் தலைமை நிர்வாக அதிகாரி சியா கியன் பெங், தேவையைப் பூர்த்திசெய்ய போதுமான அளவு பொருட்கள் இருப்பதை நேற்று மறுஉறுதிப்படுத்தினார்.

பேரங்காடிகளில் பொருட்கள் விற்றுத் தீர்ந்துபோகும் வேகத்தை, சேமிப்புக் கிடங்கிலிருந்து பேரங்காடிகளுக்குப் பொருட்களின் விநியோகம் ஈடுசெய்வதை உறுதிசெய்யவே இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.

இந்நிலையில், இங்குள்ள பல பேரங்காடிகளில் முந்தைய நாட்களுடன் ஒப்புநோக்க நேற்று நிலவரம் சற்று அமைதியாக காணப்பட்டது.

பாசிர் ரிஸ், சிராங்கூன், தாம்சன், நொவீனா, பீஷான் ஆகிய இடங்களில் செயல்படும் ஃபேர்பிரைஸ், ஷெங் சியோங், ஜயண்ட் ஆகிய மூன்று பிரதான பேரங்காடி நிறுவனங்களைச் சேர்ந்த ஏழு கடைகளுக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக்குழு நேற்று சென்றபோது, அங்கு நிலவரம் சற்று அமைதியாக காணப்பட்டது தெரியவந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!