உணவு, மளிகைப் பொருட்களுக்கான விநியோக நிறுவன மான ஹானஸ்ட்பீ, பாசிர் பாஞ்சாங்கில் உள்ள தனது 'ஹேபிடாட்' பேரங்காடியின் செயல்முறைகளை இம்மாதம் 23ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்ப தாகவும் தேவை ஏற்பட்டால் அது நீட்டிக்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்ததாலும் தனது பேரங்காடிக்கு வரும் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்திருப்பதாலும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அது கூறியது. இருப்பினும், இணையம் வழி ஆர்டர் செய்யப்படும் மளிகைப் பொருட்கள் தொடர்ந்து விநியோகிக்கப்படும் என்றும் ஹானஸ்ட்பீ தெரிவித்தது.

