தீவு விரைவுச் சாலையில் நேற்று (பிப்ரவரி 11) பிற்பகல் நீண்ட டிரெய்லர் வாகனம், கார் மோதிய விபத்தில் காயமடைந்த காரின் ஓட்டுநரான 49 வயது ஆடவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர் சுய நினைவுடன் இருந்ததாகக் கூறப்பட்டது.
விபத்தைக் காட்டும் காணொளி ஒன்றும் சமூக ஊடகங்களில் வெளியானது. (செய்திக்குப் பிறகு காணொளி இணைக்கப்பட்டுள்ளது.)
விரைவுச் சாலையின் சாங்கிக்கு செல்லும் தடத்தில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து பிற்பகல் 2.50 மணிக்கு போலிசுக்கு தகவல் கிடைத்தது.
இந்த விபத்து காரணமாக சாலைப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பதாகவும் அதனால் அந்த விரைவுச் சாலையின் 1, 2, 3 தடங்களைத் தவிர்க்குமாறும் நிலப் போக்குவரத்து ஆணையம் பிற்பகல் 3.05 மணிக்கு டுவிட்டர் மூலம் தெரிவித்தது.
விபத்து தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. விபத்தைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் செல்லும் வாகனங்களை ஒருவர் திசை திருப்பிவிடுவதைக் காட்டும் புகைப்படமும் ஸ்டோம்ப் செய்தி இணையத் தளத்துக்கு அனுப்பப்பட்டது.
விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
#தமிழ்முரசு #விபத்து #கார் #டிரெய்லர்

