துப்புரவு, கழிவு நிர்வாகத் துறையில் கல்வி உபகாரச் சம்பளம்

துப்புரவு, கழிவு நிர்வாகத் துறையில் கல்வி உபகாரச் சம்பளம்

2 mins read

துப்புரவு, கழிவு நிர்வாகத் துறையில் வேலை செய்ய விரும்பும் இருபது மாணவர்களுக்கு கல்வி உபகாரச் சம்பளம் வழங்க தேசிய சுற்றுப்புற வாரியம் முன்வந்துள்ளது.

இதனால் எந்தவிதச் செலவும் இன்றி 20 மாணவர்களும் அந்தத் துறையில் மேற்படிப்பைத் தொடர முடியும்.

படிப்பு முடிந்ததும் வேலை வாய்ப்பும் வழங்கப்படும் என்று வாரியம் தெரிவித்தது.

பலதுறைத் தொழிற்கல்லூரி அல்லது தொழில்நுட்பக் கல்வி கழகத்தில் சுற்றுப்புறம் தொடர்பான கல்வியை மேற்கொள்ள விரும்பு வோருக்கு அல்லது தற்போது அதே துறையில் படித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு் உபகாரச் சம்பளம் வழங்கப்படும்.

புதிய உபகாரச் சம்பளத்தால் சுற்றுப்புற சேவைத் துறைக்கு திறன்பெற்ற இளையர்களை ஈர்க்க முடியும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.

உற்பத்தியை அதிகரித்து புத்தாக்கத்தை புகுத்தி சுற்றுப்புற துறையை உருமாற்றும் முயற்சியின் ஓர் அங்கமாகவும் உபகாரச் சம்பளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று அது கூறியது.

முன்பு துப்புரவு, கழிவு நிர்வாகத் துறையில் 1,700க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டன. அந்த நிறுவனங்களில் 78,000க்கும் மேற் பட்ட ஊழியர்கள் பணியாற்றினர்.

தேசிய சுற்றுப்புற வாரியமும் அந்த துறையைச் சேர்ந்த நிறு வனங்களும் இணைந்து உபகாரச் சம்பளத்தை வழங்குகின்றன.

எத்தனை வருடங்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்கப்படுகிற தோ அத்தனை ஆண்டுகளுக்கு வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டு உள்ளது.

அதாவது உபகாரச் சம்பளம் பெற்று பலதுறைத் தொழில் கல்லூரி யில் மூன்று ஆண்டு பட்டயக் கல்வியை முடித்தவர்கள் குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு அந்தத் துறையில் பணியாற்ற வேண்டும்.

இதேபோல தொழில்நுட்ப கல்விக் கழகத்தில் படித்தவர்கள் குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணி செய்ய வேண்டும்.