சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி முதல் முறையாக கட்சியின் சில உத்தேச கொள்கைளை நேற்று வெளியிட்டது.
ஜிஎஸ்டி வரி அதிகரிப்பு இருக்காது என கொள்கைகளில் ஒன்றாக அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
நீண்டகால உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ஜிஎஸ்டி வரி உயர்வு மூலம் ஈடுகட்ட தேவையில்லை என்றும் அது கூறியுள்ளது. சிங்கப்பூரை ஆளும் மக்கள் செயல் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான டான் செங் போக் தலைமையில் கடந்த ஆண்டு சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி தொடங்கப்பட்டது.
அடுத்த சில நாட்களில் வரவு செலவுத் திட்டம் அறிவிக்கப்படவிருக்கும் வேளையில் அக்கட்சி உத்தேச கொள்கைகளை வெளியிட்டது.
எதிர்காலத்தில் ஜிஎஸ்டி வரி உயர்வு அல்லது இதர கட்டண உயர்வு இருந்தால் அதற்கு எதிராக ஆலோசனைகளை வெளியிடுவோம் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி தெரிவித்தது.
சிங்கப்பூரர்களிைடயே அதி கரித்து வரும் கவலைக்குரிய அம்சங்களான விலைவாசி உயர்வு, வீடமைப்பு, சுகாதாரப் பராமரிப்புச் செலவுகள், சிங்கப்பூரர் அல்லாதோர் தரக்கூடிய போட்டித்தன்மை, ஓய்வுகால நிதிப் பற்றாக்குறை, இவற்றுடன் அதிகரித்து வரும் சமுதாய ஏற்றத் தாழ்வு நிலைமை போன்றவற்றை சமாளிக்க உதவும் நீண்டகால கொள்கைகளுக்கு நமது வலுவான நிதிநிலை நமக்கு தைரியமூட்டுகின்றன என்று அது குறிப்பிட்டது.

