தீச்சம்பவங்கள் அதிகரிப்பு

தீச்சம்பவங்கள் அதிகரிப்பு

1 mins read

கடந்த ஆண்டு தனிநபர் நடமாட்டச் சாதனம் தொடர்பான தீ விபத்துகள் அதிகம் நிகழ்ந்துள்ளன.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை நேற்று வெளியிட்ட அறிக்கையில் மொத்தம் 2,862 தீச்சம்பவங்கள் கையாளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இது, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7.8 விழுக்காடு அதிகம்.

இதில் குப்பை மற்றும் குப்பை கூளங்களால் ஏற்பட்ட தீச்சம்பவங்கள் சேர்க்கப்படவில்லை என்று குடிமைத் தற்காப்புப் படை குறிப்பிட்டது.

இவற்றில் பெரும்பாலனவை ஆபத்து இல்லாத தீச்சம்பவங்களாகும்.

சிகரெட் துண்டு போன்ற எரியும் பொருட்களை தூக்கி எறிந்ததால் இத்தகைய தீச்சம்பங்கள் ஏற்பட்டதாகவும் அது கூறியது. கடந்த ஆண்டு நிகழ்ந்த தீச்சம்வங்களில் மூன்றில் ஒரு பங்கு இத்தகைய தீச்சம்பவங்களாகும்.

இதற்கு அடுத்ததாக மின் கசிவினால் அதிக தீச்சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த ஆண்டின் ஒட்டு மொத்த தீச்சம்பவங்களில் 23% மின்சாரக் கோளாறு காரண மாக ஏற்பட்டவை.

கடந்த ஆண்டு 50 விழுக்காடுக்கு மேல் நிலப் பகுதிகளில் நிகழ்ந்த தீச்சம்பவங்களாகும்.

2019ல் ஜனவரி முதல் மார்ச் வரையில் நிலவிய வறண்ட பருவநிலை காரணமாக இத்தகைய தீச்சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

தனிநபர் நடமாட்டச் சாதனம் தொடர்பான தீச்சம்பவங்களும் கவலையளிக்கிறது என்று குடிமைத் தற்காப்பு படை தெரிவித்தது.

கடந்த ஆண்டு தனிநபர் நடமாட்டச் சாதனம் தொடர்பில் 102 சம்பவங்கள் நிகழ்ந்தன. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்கு அதிகமாகும். இத்தகைய தீச்சம்பவங்களில் 46 பேர் காயம் அடைந்தனர்.