தீ விபத்தில் காயம் அடைந்த இரு ஊழியர்கள் மரணம்

தீ விபத்தில் காயம் அடைந்த இரு ஊழியர்கள் மரணம்

1 mins read
e67e7c3b-bae0-4b76-a3d3-04d7de3dac30
ஜூரோங் தீவில் உள்ள ரசாயனத் தொழிற்சாலையில் இம்மாதம் 7ஆம் தேதி நிகழ்ந்த தீ விபத்தில் காயம் அடைந்த இரு ஊழியர்கள் மரணமடைந்தனர். ஒருவர் சிங்கப்பூரர், மற்றொருவர் இந்தியாவைச் சேர்ந்த ஊழியர். படம்: எஸ்டி, கெல்வின் சிங் -

ஜூரோங் தீவில் உள்ள ரசாயனத் தொழிற்சாலையில் இம்மாதம் 7ஆம் தேதி நிகழ்ந்த தீ விபத்தில் காயம் அடைந்த இரு ஊழியர்கள் மரணமடைந்தனர். ஒருவர் சிங்கப்பூரர், மற்றொருவர் இந்தியாவைச் சேர்ந்த ஊழியர்.

எண் 21ல் சாக்ரா அவென்யூவில் ஹைட்ரோ கார்பன் குழாய்களைப் பதிக்கும் வேலை நடைபெற்றபோது காயம் அடைந்த ஊழியர்களில் இவர்களும் அடங்குவர்.

தீக்காயம் அடைந்த 38 வயது சிங்கப்பூரரும் 29 வயது இந்திய நாட்டு ஊழியரும் உடனடியாக இங் டெங் ஃபோங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இருவரும் உயிரிழந்தனர்.