போலிசாரை தாக்கியதாக இளையர் மீது குற்றச்சாட்டு

போலிசாரை தாக்கியதாக இளையர் மீது குற்றச்சாட்டு

1 mins read

செங்காங் பொது மருத்துவமனையில் மருத்துவ சோதனைக்கு வந்த இளையர் ஒருவர், காவல்துறை அதிகாரிகளை எட்டி உதைத்து குத்தியதால் கைது செய்யப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணியளவில் மருத்துவ சோதனை செய்து கொண்டிருந்த அவர், மருத்துவ ஊழியர்களை எதிர்த்து செயல்பட்டார். இதனால் துணை போலிஸ் படை அதிகாரி ஒருவர் உதவிக்கு அழைக்கப்பட்டார். அப்போது அங்கு வந்த அதிகாரியை அவர் முகத்தில் குத்தினார். இதையடுத்து போலிசார் அவரை கைது செய்தனர். அவர் மீது குற்றம்சாட்டப்படும் என்று போலிசார் தெரிவித்தனர்.