தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பேருந்து, ரயில் பயணங்கள் சாதனை அளவுக்கு அதிகரிப்பு

1 mins read
03330788-2508-4e68-85e3-8612a341f6c4
பேருந்து, ரயில் மற்றும் தனியார் வாடகை வாகனம் போன்ற பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை சாதனை அளவாக அதிகரித்துள்ளது. படம்: எஸ்டி -

பேருந்து, ரயில் மற்றும் தனியார் வாடகை வாகனம் போன்ற பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை சாதனை அளவாக அதிகரித்துள்ளது. ஆனால் டாக்சிகளைப் பயன்படுத்துவோர் குறைந்துவிட்டனர்.

கடந்த ஆண்டு பேருந்து பயணங்கள் 1.5 விழுக்காடு கூடியது. அதாவது பேருந்துகளில் ஒரு நாள் சராசரி பயணங்களின் எண்ணிக்கை 4,099,000 ஆகும்.

ரயில் பயணங்களின் எண்ணிக்கையும் 2.6 விழுக்காடு கூடி 3,592,000ஆக அதிகரித்தது.

இந்த விவரங்களை நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று வெளியிட்டது.

பேருந்து, ரயில் ஆகிய இரு பொதுப் போக்குவரத்து பயணங்களை ஒன்று சேர்த்தால் ஒரு நாள் சராசரி பயணங்கள் சாதனை அளவாக 7,691,000க்கு அதிகரித்துள்ளன. இது, 2 விழுக்காடு உயர்வாகும். மேலும் இரு பொதுப் போக்குவரத்து பயணங்களின் எண்ணிக்கை 15வது ஆண்டாக தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளன. பேருந்து, ரயில்களில் பயணங்கள் கூடியிருப்பதற்கு காரணமும் உள்ளது.

கடந்த ஆண்டில் ரயில் கட்டமைப்பு விரிவாக்கப்பட்டது. புதிய பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.

இதனால் பேருந்து, ரயில் சேவைகளை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கையும் கூடியது. ஆனால் மறுபக்கம் டாக்சி பயணங்களின் எண்ணிக்கை சரிந்துவிட்டது.

டாக்சி பயணங்கள் 13.5% குறைந்து நாளுக்கு 353,000 பயணங்கள் ஆனது.

அதே சமயத்தில் தனியார் வாடகை வாகனங்களுக்கான சேவை 20.7 விழுக்காடு அதிகரித்தது. இது, ஒரு நாளுக்கு 755,000 பயணங்களுக்கு ஈடானது.