வீவக வீட்டில் தீ விபத்து: 66 வயது ஆடவர் மரணம்

வீவக வீட்டில் தீ விபத்து: 66 வயது ஆடவர் மரணம்

1 mins read
6249b8c1-c461-4579-823c-ed1a69de3fc9
அங் மோ கியோவிலுள்ள வீவக வீட்டில் இன்று காலை தீப்பற்றியது. படம்: லியன்ஹ வான்பாவ் -

அங் மோ கியோ அவென்யூ 6, புளோக் 123ல் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 66 வயது ஆடவர் உயிரிழந்தார்.

தீக்காயங்களால் பாதிக்கப்பட்டு டான் டோக் செங் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஏழாவது மாடியில் ஏற்பட்ட தீச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு இன்று காலை 8.10 மணிக்கு தகவல் கிடைத்தது.

வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற தீ அணைப்புப் படையினர் வரவேற்பு அறையில் தீக்காயங்களுடன் இருந்த ஆடவரைக் கண்டனர்.

வரவேற்பறைப் பொருட்களில் பற்றி இருந்த தீயை படையினர் அணைத்தனர்.

இயற்கைக்கு மாறான மரணம் என இது வகைப்படுத்தப்பட்டு விசாரணை தொடர்கிறது.

#தமிழ்முரசு #தீ #அங்மோகியோ

குறிப்புச் சொற்கள்