டாக்சி, தனியார் வாடகை கார் ஓட்டுநர்களுக்காக $77 மில்லியன் உதவித்திட்டம்

கொவிட்-19 கிருமித்தொற்று நெருக்கடியால் கடும் வருமான இழப்பை எதிர்கொண்டுள்ள டாக்சி ஓட்டிகள், தனியார் வாடகை கார் ஓட்டுநர்களுக்குக் கைகொடுக்க $77 மில்லியன் உதவித்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியுதவித் திட்டத்தில் அரசாங்கத்தின் பங்கு $45 மில்லியன். எஞ்சிய தொகையை டாக்சி, வாடகை கார் சேவை வழங்கும் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளும்.

“டாக்சி, தனியார் வாடகை கார் ஓட்டுநர்களுக்கு அவசர உதவி தேவை என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளது,” என்று நிலப் போக்குவரத்து ஆணையமும் போக்குவரத்து அமைச்சும் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“இடைநில்லாப் பயண சேவை வழங்கும் டாக்சி, தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள் நாளொன்றுக்கு மேற்கொள்ளும் பயணங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. எங்களுக்குக் கிடைத்த தரவுகளில் சில அது 10% இருக்கலாம் எனக் கூறுகின்றன. ஆனால், இன்று (நேற்று) நான் ஓட்டுநர்களைச் சந்தித்துப் பேசியபோது, கடந்த இரு நாட்களில் தாங்கள் மேற்கொண்ட பயணங்களின் எண்ணிக்கையைச் செயலிகளில் அவர்கள் காட்டினர். அதைப் பார்க்கும்போது, அந்தச் சரிவு அதிகமாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது,” என்று போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி கூறினார். 

இத்திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட 40,000 ஓட்டுநர்கள் பலனடைவர். அவர்களுக்கு இன்று முதல் மூன்று மாதங்களுக்கு நாளொன்றுக்கு $20 உதவித்தொகை கிடைக்கும்.

பிரதான டாக்சி ஓட்டுநர்கள் அனைவரும் இந்த உதவித் திட்டத்தின்கீழ் பயன்பெறத் தகுதிபெறுவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

உதவித்தொகையைப் பெற அவர்கள் விண்ணப்பிக்க வேண்டியது இல்லை. ஒவ்வொரு நாளும் தானாகவே அவர்களது கணக்கில் $20 சேர்ந்துவிடும்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரை குறைந்தது 200 பயணங்களை மேற்கொண்ட தனியார் வாடகை கார் ஓட்டுநர்களும் இந்த உதவித்திட்டத்தின்கீழ் பயன்பெறுவர்.

நாள்தோறும் $20 உதவித்தொகை பெறுவதற்குத் தகுதிபெறாத ஓட்டுநர்கள், அரசாங்கமும் என

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon