சுடச் சுடச் செய்திகள்

அவசரகால தகவல்கள் தரும் செயலி

சிங்கப்பூரின் வடமேற்கு வட்டார மக்கள் தீச் சம்பவம், எரிமலை வெடிப்பு போன்ற பல்வேறு அவசரகால தகவல்கள், வளங்களைப் பெற உதவியாக நார்த் வெஸ்ட் 911 என்ற புதிய செயலி நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றத்தின் வட்டார ஆலோசகரும் அவசரகால தயார்நிலை வளக் குழுவின் தலைவருமான 29 வயது திரு ஜோனத்தன் டானும் மென்பொருள் மேம்பாட்டாளர்களான இரு தொண்டூழியர்களும் இணைந்து உருவாக்கிய இச்செயலியை உருவாக்கியுள்ளனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கல்வி அமைச்சர் ஓங் யி காங், முழுமைத் தற்காப்பின் ஐந்து அம்சங்களில் உளவியல் தற்காப்பு மிக முக்கியமானது, வளர்க்க மிகக் கடினமானது. இத்தகைய செயலி உருவாக்கங்கள் சிங்கப்பூரர்களிடம் உளவியல் மீட்சித்திறன் இருப்பதைக் காட்டுகிறது என்றார்.

கொவிட்-19 தொற்றைத் தடுக்கும் முதல் நிலை ஊழியர்களின் முயற்சிகளைப் பாராட்டிய அமைச்சர், அவர்களுக்கு சிங்கப்பூரர்கள் முன்வந்து நன்றிதெரிவிப்பதையும் குறிப்பிட்டார். இத்தகைய பரிவின் வெளிப்பாடுகள் சிங்கப்பூரின் உளவியல் தற்காப்புக்கு வலுச் சேர்்க்கும் என்றார் அவர். 

குடியிருப்பாளர்களுக்கு இது வள மாக அமைவதுடன் “உயிர் காக்கும் சமூகத்தை உருவாக்கும் என்றார் வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்ற மேயர் டாக்டர் டியோ ஹோ பின்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon