பிப்ரவரி 15ஆம் தேதி ஒரு நிமிட சங்கொலி

முழுமைத் தற்காப்புத் தினத்தை முன்னிட்டு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை நாளை பிப்ரவரி 15ஆம் தேதி மாலை 6.20 மணிக்கு நாடு முழுவதும் ஒரு நிமிட சங்கு ஒலியை எழுப்பும். 70க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன் அதாவது 1942ல் இதே நாளன்றுதான் ஜப்பானியப் படைகளிடம் பிரிட்டன் சரணடைந்தது. அந்த வரலாற்று முக்கிய நிகழ்ச்சியை நினைவுகூரும் வகையில் சங்கொலி எழுப்பப்படுகிறது. சங்கொலியைச் செவிமடுத்த பிறகு உள்ளூர் வானொலியில் பொது எச்சரிக்கை முறை மூலம் ஒரு செய்தியையும் பொதுமக்கள் கேட்கலாம். 
மேல் விவரங்களுக்கு www.scdf.gov.sg என்ற இணையத் தளத்தைப் பார்க்கவும். SGSecure என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்து கைபேசிகளிலும் சங்கொலியைக் கேட்க முடியும்.