சுடச் சுடச் செய்திகள்

இரண்டாம் காலாண்டில் மசே நிதி வட்டி வகிதத்தில் மாற்றமில்லை

தங்களின் பல்வேறு மத்திய சேம நிதிக் கணக்குகளில் உறுப்பினர்கள் பெறும் வட்டி விகிதங்களில் இவ்வாண்டில் இரண்டாம் காலாண்டிலும் எவ்வித மாற்றமும் இருக்காது என்று மத்திய சேம நிதிக் கழகமும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் (வீவக) நேற்று வெளியிட்ட தங்களின் கூட்டறிக்கையில் தெரிவித்தன.

சாதாரணக் கணக்கில் உள்ள தொகைக்குக் கொடுக்கப்படும் வட்டியான ஆண்டுக்கு 2.5% எனும் விகிதம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை மாறாமல் இருக்கும். வீவகவின் அடைமான கடன்களுக்கான வட்டியான ஆண்டுக்கு 2.6% என்ற விகிதத்திலும் இரண்டாம் காலாண்டில் மாற்றம் இருக்காது.

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை சாதாரணக் கணக்கில் உறுப்பினர்கள் தொடர்ந்து ஆண்டுக்கு 3.5% வரையிலான வட்டியும் சிறப்பு மற்றும் மெடிசெவ் கணக்குகளில் தொடர்ந்து ஆண்டுக்கு 5% வரையிலான வட்டியும் பெறுவார்கள். 

55 வயதைக் கடந்தவர்களும் தங்களின் ஒன்றிணைந்த கணக்கில் உள்ள முதல் $30,000க்கு கூடுதலாக 1% வட்டி பெறுவார்கள். இது தங்களின் ஒன்றிணைந்த கணக்கில் உள்ள முதல் $60,000க்குக் கொடுக்கப்படும் கூடுதலான 1% வட்டிக்கு மேற்பட்டு இருக்கும். 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon