$149,000 ரொக்கம் பற்றி தெரிவிக்கத் தவறிய மாதுக்கு $3,000 அபராதம்

தம்மிடம் $149,000 சிங்கப்பூர் பணம் இருப்பதை அதிகாரி களுக்குத் தெரிவிக்காமல் சாங்கி விமான நிலையம் வழி சிங்கப்பூரை விட்டு புறப்பட முயன்ற வியட்னாமிய மாது ஒருவருக்கு நேற்று முன்தினம் $3,000 அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் தேதி யன்று மாது ஒருவர் $20,000க்கு மேற்பட்ட தொகையை சாங்கி விமான நிலைய முனையத்தைக் கடந்து எடுத்துச் செல்லவிருக்கிறார் என்று போலிசுக்குக் கிடைத்த தகவலை அடுத்து அந்த மாது சோதிக்கப்பட்டார். நுயன் தி டாவ் என்ற பெயர் கொண்ட அந்த மாதுவிடம் $149,000 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 

Loading...
Load next