சூப்பில் திருகாணியை கண்டுபிடித்த பயணியிடம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மன்னிப்பு

முதல்-நிலை (First-class) பயணி ஒருவர் தமது பூசணிக்காய் காளான் சூப்பில் திருகாணியைக் கண்டுபிடித்ததை அடுத்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அவரிடம் மன்னிப்பு கோரியுள்ளது. 

சிங்கப்பூரிலிருந்து ஆக்லாந்திற்குப் பயணம் மேற்கொண்ட அவர் ‘வி‌சேட்’ (WeChat) சமூக ஊடகத்தில் அவரின் பயணத்தைப் பற்றி விமர்சித்தார்.

வாயிலிருந்து திருகாணியை எடுத்து காட்டியது விமான ஊழியர்களுக்கு பீதியைக் கிளப்பிவிட்டது என்றும் வாயில் அந்த கூர்மையான பொருளை உணர முடிந்தது ஓர் அதிர்‌ஷ்டமான வி‌‌ஷயம் என்றும் கூறினார் அந்தப் பயணி.  

“சேவை சூழ்நிலையை மீட்க எனக்கு உடனே $200 பற்றுச்சீட்டு வழங்கப்பட்டது. ஆனால் எனக்குப் பசியே போய்விட்டது,” என்றார் அந்தப் பயணி. 

செய்தி,படம்: ஸ்டாம்ப்