கொரோனா கிருமித்தொற்று: 1 வயதுக் குழந்தை உட்பட இருவருக்கு கிருமித்தொற்று

1 mins read
201dafcf-8012-4bc5-b30a-05cc3c59c2ab
ஒரு வயதுக் குழந்தை உட்பட இருவருக்கு கிருமித்தொற்று வூஹானிலிருந்து பிப்ரவரி 9ஆம் தேதி சிங்கப்பூர் திரும்பிய ஒரு வயது குழந்தை உட்பட சிங்கப்பூரில் மேலும் இருவருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வூஹானிலிருந்து பிப்ரவரி 9ஆம் தேதி சிங்கப்பூர் திரும்பிய ஒரு வயது குழந்தை உட்பட சிங்கப்பூரில் மேலும் இருவருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

ஸ்கூட் விமானத்தில் நாடு திரும்பிய 174 பேரில் கிருமித்தொற்று இருப்பது உறுதியான முதல் சிங்கப்பூரர் இந்தக் குழந்தை. அதன் நிலைமை சீராக இருப்பதாகவும் கேகே பெண்கள், சிறார் மருந்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும் சுகாதார அமைச்சு கூறியது.

மற்றவர் 35 வயது ஆடவர். கிரு மித்தொற்று ஏற்பட்ட டிபிஎஸ் வங்கி ஊழியருடன் தொடர்புகொண்டவர். பிப்ரவரி 12ஆம் தேதி இவருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதியானது. இவர்களுடன் இங்கு கிருமித்தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 77 ஆகியுள்ளது.

கிருமித்தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 77 பேரில் 24 பேர் குணமாகி வீடு திரும்பி விட்டனர்.

மருத்துவமனையிலுள்ள 53 பேரில் நால்வர் தீவிர சிகிச்சை பெறுகின்றனர். தீவிர சிகிச்சை பெற்றுவந்த மற்றொவரின் உடல்நிலை தேறிவிட்டதாகவும் அவர் இன்னமும் மருத்துவமனையில் இருப்பதாகவும் அமைச்சின் அறிக்கை கூறியது.