சென்ற மாதம் பிடோக் நார்த் குப்பைத்தொட்டி ஒன்றில் துப்புரவாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஆண் குழந்தை, தற்போது வளர்ப்பு பெற்றோரின் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சீரான உடல்நிலையில் இருக்கும் குழந்தையை சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணித்து வரும் என்று அமைச்சின் பேச்சாளர் நேற்று கூறினார். 12 வயதுக்கும் கீழ் இருந்த குழந்தையைக் கைவிட்டதன் தொடர்பில் சென்ற வாரம் குழந்தையின் தாயார் என்று நம்பப்படும் 26 வயது சிங்கப்பூரர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இம்மாதம் 28ஆம் தேதியன்று நீதிமன்றத்திற்கு வழக்கு மீண்டும் வரும். இதற்கிடையே குழந்தையின் தந்தை யார் என்று அடையாளம் காண்பதற்கான முயற்சியில் போலிசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
குப்பைத்தொட்டியில் கைவிடப்பட்ட குழந்தை, வளர்ப்பு பெற்றோரிடம்
1 mins read
குழந்தையைக் கைவிட்டதன் தொடர்பில் சென்ற வாரம் குழந்தையின் தாயார் என்று நம்பப்படும் 26 வயது சிங்கப்பூரர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இம்மாதம் 28ஆம் தேதியன்று நீதிமன்றத்திற்கு வழக்கு மீண்டும் வரும். கோப்புப்படம்: எஸ்டி, லிம் யாவ்ஹுய் -

