பட்ஜெட்: பொருளியல் உருமாற்றத்துக்கு $8.3 பில்லியன்

நிறுவனங்களை ஊக்குவிக்கவும் பொருளியல் உருமாற்றம் கண்டு வளரவும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அரசாங்கம் $8.3 பில்லியன் ஒதுக்கும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்தார்.

கடந்த ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட தொகையையும் சேர்த்து இந்தப் புதிய தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சருமான திரு ஹெங், வலுவான பங்காளித்துவத்தை ஏற்படுத்துவது, நிறுவனங்களின் திறன்களை மேம்படுத்துவது, மக்களை மேம்படுத்துவது ஆகிய மூன்று முக்கிய நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இந்த நிதி சென்றடையும் என்று கூறினார்.

“சிறிய, திறந்த பொருளியலாக இருக்கும் சிங்கப்பூர், உலக நாடுகளுடனான பங்காளித்துவத்தைத் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும். உலக நாடுகளுடன் நமக்கு இருக்கும் தொடர்புகளை முழுமையாகப் பயன்படுத்த சிங்கப்பூருக்குள் இருக்கும் பங்காளித்துவத்தையும் வலுப்படுத்த வேண்டும்,” என்றார் திரு ஹெங்.

மின்னிலக்கத் தொடர்பையும் அரசாங்கம் மேம்படுத்துவதாக அவர் கூறினார்.

வெளிநாட்டு விநியோகஸ்தர்கள் அரசாங்கத்துக்கு மின்னிலக்க விலைப்பட்டியல்களை அனுப்பிவைக்க நாடு தழுவிய மின்னிலக்க விலைப்பட்டியல் கட்டமைப்பு போன்ற திட்டங்கள் அனுமதிக்கின்றன.

வர்த்தகத் தரவுகளை அனைத்துலக அளவில் பரிமாற்றம் செய்துகொள்ள கட்டமைக்கப்பட்டுள்ள வர்த்தகத் தளம் வழிசெய்கிறது.

அனைத்துலகப் பங்காளித்துவங்கள் ஒருபுறம் இருக்க, தொழில்துறைகளுக்குள் தொடர்புகளை சிங்கப்பூர் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

திறன்களை மேம்படுத்த நிறுவனங்களை ஊக்குவிக்க முழு நேர நிர்வாகிகள் திட்டத்தை என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அறிமுகப்படுத்த இருக்கிறது.

அனுபவமிக்க நிர்வாகிகளை வேலைக்கு எடுக்க உதவும் வகையில் 10க்கும் மேற்பட்ட வர்த்தகச் சங்கங்களுக்கும் வர்த்தகச் சபைகளுக்கும் இந்தத் திட்டம் நிதி வழங்கும்.

வேலைக்கு எடுக்கப்படும் அனுபவமிக்க நிர்வாகிகள் அவர்கள் இருக்கும் தொழில்துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு நிபுணத்துவ ஆலோசனை வழங்குவர்.

குடியிருப்புப் பேட்டை நிறுவனங்களுக்கான மேம்பாட்டுத் திட்டத்தையும் என்டர்பிரைஸ் சிங்கப்பூர் தொடங்கி வைக்கும்.

குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள நிறுவனங்கள் உருமாற்றம் காணுவதை ஊக்குவிக்க இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

நான்கு ஆண்டு புதுப்பிப்புத் திட்டங்களை நடத்தும் குறிப்பிட்ட சில வர்த்தகர் சங்கங்களுக்கு இத்திட்டம் மூலம் ஆதரவு வழங்கப்படும்.

புதுப்பிப்புத் திட்டங்களில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள், நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்குமான பயிற்சிகள் போன்றவை அடங்கும்.

புதிய நிறுவனங்கள், குறிப்பாக டீப் டெக் எனப்படும் அறிவியல், பொறியியல் புத்தாக்கத்தைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்குக் கூடுதல் உதவி கிடைக்கும்.

புதிய நிறுவனங்களுக்கான எஸ்ஜி இணை முதலீட்டுத் திட்டத்தின்கீழ் கூடுதலாக $300 மில்லியனை அரசாங்கம் ஒதுக்கும் என்று திரு ஹெங் அறிவித்தார்.

புதிய தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆரம்பநிலைக்கு இந்தத் தொகை நிதி உதவி வழங்கும்.

“அடுத்த பத்து ஆண்டுகளில் இத்திட்டம் $800 மில்லியனுக்கும் அதிகமான தனியார் நிதியை ஈர்க்கும் என எதிர்பார்க்கிறோம். இதன் மூலம் புதிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு நிதி, நிபுணத்துவ மற்றும் தொழில் கட்டமைப்பு ஆகிய உதவிகள் எளிதில் கிடைக்கும்,” என்றார் திரு ஹெங்.

மின்னிலக்க காலகட்டத்தில் நிறுவனங்கள் புத்தாக்கத்தைக் கடைப்பிடிக்கவும் மாறவும் உதவி செய்ய பல நடவடிக்கைகளை அவர் அறிமுகப்படுத்தினார்.

தொழில்நிறுவனங்களுக்கான உருமாற்றத் தொகுப்புத் திட்டத்தையும் திரு ஹெங் அறிமுகப்படுத்தினார்.

அதில் நன்கு செயல்படும் சிறிய, நடுத்தர நிறுவனங்களின் வர்த்தகத் தலைவர்களுக்கு ஆதரவு வழங்கும் திட்டம் உள்ளது.

அடுத்த மூன்று ஆண்டுகளில் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் வழியாக 900 நிறுவனங்களின் வர்த்தகத் தலைவர்களைத் தயார் செய்ய இத்திட்டம் இலக்கு கொண்டுள்ளது.

புத்தாக்கத்தைக் கடைப்பிடித்து அனைத்துலக அளவில் செயல்பட நிறுவனங்களுக்கு ஒருங்கிணைந்த ஆதரவைத் தரும் நிறுவன மேம்பாட்டு மானியம் இந்த நிதி ஆண்டில் ஏறத்தாழ 3,000 திட்டங்களை ஆதரிக்கும். இது முன்பைவிட 10 விழுக்காடு அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!