கண்ணாடி போத்தலை எறிந்த கண் மருத்துவர்

இங் டெங் ஃபோங் மருத்துவமனையின் கண் சிகிச்சைப் பிரிவு தலைமை மருத்துவரான லென்னர்ட் ஹெரால்ட் தியன் சீ யின், 55, இன்னொருவரின் கார் மீது ‘ஒயின்’ போத்தலை வீசியெறிந்ததை ஒப்புக்கொண்டார். கடந்த ஆண்டு மார்ச் 18ஆம் தேதி இச்சம்பவம் நிகழ்ந்தது. சாலையில் சென்றபோது ஆத்திரத்தில் டாக்டர் தியன் அப்படிச் செய்துவிட்டதாகக் கூறப்பட்டது. இதனால் திரு மார்ட்டின் லூ ஜுன்வெய், 36, என்பவரது காரின் பின்பக்க விளக்கு சேதமடைந்தது. அதனைச் சரிசெய்ய ஆன செலவை டாக்டர் தியன் கொடுத்துவிட்டார்.  அவருக்கான தண்டனை விவரம் வரும் மார்ச் 18ஆம் தேதி அறிவிக்கப் படவுள்ளது.