கொரோனா கிருமித்தொற்று சிங்கப்பூர் வெள்ளி மற்றும் தென்கொரிய 'வொன்' மதிப்பு நேற்று பெரும் வீழ்ச்சி கண்டது. அமெரிக்க டாலருக்கு நிகரான அவ்விரு நாணயங்களின் மதிப்பும் நேற்று கிட்டத்தட்ட 1% சரிந்தது. சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு ஏறக் குறைய மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்தது. நேற்றுக் காலை நிலவரப்படி, ஓர் அமெரிக்க டாலருக்கு நிகரான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு 1.4083ஆக இருந்தது. தென்கொரியாவில் இரண்டு நாட்களில் மேலும் 51 பேரைக் கிருமி தொற்றியதே அந்நாட்டு நாணயத்தின் மதிப்பு சரியக் காரணம் எனக் கூறப்பட்டது.
சிங்கப்பூர் வெள்ளி மதிப்பு குறைந்தது
1 mins read
கோப்புப்படம்: த நியூபேப்பர் -

